- °C
Are You a business owner?
List Your Business / ADரஜினியின் வேட்டையன் படத்தை விஜய் தியேட்டரில் சென்று பார்த்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேலின் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இந்த படம் அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்டது.
போலீஸ் கேரக்டரில் ரஜினிகாந்த் வழக்கம்போல மாஸ்ஸான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். படத்தில் பகத் பாசிலுடைய கேரக்டர் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. சிலர் படத்தின் முதல் பாதி மிக நன்றாக இருப்பதாகவும், 2 ஆவது பாதி சராசரிக்கு அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. க்ரைம் த்ரில்லர் ஜேனரில் வெளிவந்துள்ள வேட்டையன் படத்தில் திரைக்கதை மிகவும் விறுவிறுப்பாக உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் வேட்டையன் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்களே அதிகம் வந்துள்ளன. வழக்கமான ரஜினி படங்களைப் போல் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல், வேட்டையன் படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Thanks to News 18 tamil
Copyrights © 2025 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.